திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி விரதத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி விரதத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி விரதத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 1:49 pm

பாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இம்முறை மகா சிவராத்திரி விரத விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

வழமைபோன்று இம்முறையும் சுமார் ஐந்து இலட்சம் பக்தர்கள் திருக்கேதீஸ்வரத்தில் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

இவர்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள், மின்சாரம், குடிநீர், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

திருக்கேதீஸ்வரம் ஆலய வாளகத்திற்குள் பொலித்தீன் பாவிப்பதற்கும் பாலாவிக் குளத்தில் சவர்க்கார பாவனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் இது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்