தம்பதியருக்குக் கிடைத்த தங்கப் புதையல்

தம்பதியருக்குக் கிடைத்த தங்கப் புதையல்

தம்பதியருக்குக் கிடைத்த தங்கப் புதையல்

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 3:45 pm

அமெரிக்கத் தம்பதியருக்குக் கிடைத்த தங்க நாணயப் புதையல்,  அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய புதையல் கண்டுபிடிப்பாக இருக்கும் என்று  நாணய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

1,400 புத்தம் புதிய, அபூர்வ தங்க நாணயங்கள், துருப்பிடித்திருந்த உலோகக் குவளைகளில் கிடந்ததை, அந்தத் தம்பதியர் கண்டுபிடித்தனர்.

இந்த நாணயங்களின்  மதிப்பு சுமார் 10 மில்லியன் டொலர்களுக்கும் மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.

வட கலிபோர்னியாவில் உள்ள தங்களது நிலத்தில் தங்கள் நாயை நடத்திச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் புதையல் அவர்களுக்குத் தென்பட்டதாம்.

1800களின் மத்தியிலிருந்து பிற்பகுதி வரை நீடித்த “தங்கப் புதையல் வேட்டை” (Gold Rush E ra) காலத்தைச் சேர்ந்தவை இந்த நாணயங்கள் என்று கருதப்படுகிறது.

இந்த நாணயங்கள் ஒவ்வொன்றின் முக மதிப்பு 5 டொலர்களிலிருந்து 20 டொலர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றுமே ஒரு மில்லியன் டொலர்கள் வரை ஏலத்தில் போகக்கூடும் என்று அத்தம்பதியரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்