சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து

சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து

சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 4:45 pm

சென்னை விமான நிலையத்தில், பறவைகளை விரட்டுவதற்காக பட்டாசு வெடித்தபோது,  ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பொறி அருகிலிருந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றில் பட்டு தீ பரவியதாகக் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகாமையில் 5 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதால் உயிர் சேதங்களோ, பாரிய பொருட்சேதங்களோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்