சிறையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழ் கைதி: வடமராட்சியில் இறுதிக் கிரியைகள்

சிறையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழ் கைதி: வடமராட்சியில் இறுதிக் கிரியைகள்

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 5:36 pm

சிறைச்சாலையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழ் கைதியின்  ஈமைக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வடமராட்சியில் நடைபெறவுள்ளது.

விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய பிரஜையின் சடலம் நேற்று முன்தினம் சிறைச்சாலையின் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

அவர் மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்வலிங்கம் கோபிதாஸ் மரணத்தினைத் தொடர்ந்து அவரது மனைவி, மற்றும் இரு பிள்ளைகள் இலங்கை வந்துள்ளனர்.

 பூதவுடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புலோலி மந்திகையில் உள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்வலிங்கம் கோபிதாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவிபுரிந்தார் என்ற குற்றச்சாட்டில் 2007 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்  2012 ஆம் ஆண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்