சம்மாந்துறையில் இந்திய பிரஜை கைது

சம்மாந்துறையில் இந்திய பிரஜை கைது

சம்மாந்துறையில் இந்திய பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 11:14 am

குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் சம்மாந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலுவில் பல்கலைகழக வளாகத்திற்கு அருகில், நேற்று மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்