“சிறைக்கூடமா? வதைக்கூடமா?” – பிரித்தானிய தமிழ் பிரஜையின் மரணத்திற்கு எதிராக சிறைச்சாலை முன் ஆர்ப்பாட்டம்

“சிறைக்கூடமா? வதைக்கூடமா?” – பிரித்தானிய தமிழ் பிரஜையின் மரணத்திற்கு எதிராக சிறைச்சாலை முன் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 8:14 pm

வெலிக்கடை மெகஸின் சிறைச்சாலையின் கழிவறையில் இருந்து கைதி ஒருவரின் சடலம்  மீட்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கைதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர்.

வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை, மெகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த விஷ்வலிங்கம் கோபிதாஸின் சடலம் இன்று காலை யாழ்ப்பாணம் புலோலி மந்திகையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, விஷ்வலிங்கம் கோபிதாஸின் உயிரிழப்பு தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் நேற்று மாலை இடம்பெற்றதுடன் அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக கோபிதாஸின் உறவினர்கள் நேற்று குற்றம் சுமத்தியிருந்தனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த 43  வயதான விஷ்வலிங்கம் கோபிதாஸ் பிரித்தானியாவில் பிரஜாவுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சடலம் நேற்று முன்தினம் காலை வெலிக்கடை சிறைச்சாலையின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்