எனது தேர்தல் வரவு செலவுகளை இணையத்தளத்தின் ஊடாக வெளியிடவுள்ளேன் – உதய கம்பன்பில

எனது தேர்தல் வரவு செலவுகளை இணையத்தளத்தின் ஊடாக வெளியிடவுள்ளேன் – உதய கம்பன்பில

எனது தேர்தல் வரவு செலவுகளை இணையத்தளத்தின் ஊடாக வெளியிடவுள்ளேன் – உதய கம்பன்பில

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 8:30 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட குழுத் தலைவர் உதய கம்பன்பில, இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது அவர் தெரிவித்ததாவது;

[quote]இந்தியாவிலுள்ள அனைத்து வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரசாரத்திற்காக சேகரித்த பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். அமெரிக்கா அதையும் தாண்டி சற்று முன்னோக்கி சென்றுள்ளது. தேர்தலுக்காக நிதியை வழங்கிய நபரின் பெயரையும்  அங்கு வெளிப்படுத்த வேண்டும். வெளிநாடுகளின் பெரும்பாலான நாடுகள், தேர்தலுக்காக செலவிடுகின்ற நிதியை மட்டுப்படுத்தியுள்ளன. அதேபோன்று, தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றதன் பின்னர், தமது வரவு செலவு குறித்த தகவல்களை தேர்தல்கள் செயலகத்திற்கு வழங்க வேண்டும். இந்த கலாசாரத்தை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்தும் வண்ணம், எனது தேர்தல் வரவு செலவுகளை எனது இணையத்தளத்தின் ஊடாக வெளியிடவுள்ளேன். ஊடகங்களுக்கும் வழங்க எதிர்பார்க்கின்றேன்[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்