இலங்கை தொடர்பில் ஐ.நா வின் விசாரணையைக் கோரியுள்ளது சர்வதேச பொது மன்னிப்புச் சபை

இலங்கை தொடர்பில் ஐ.நா வின் விசாரணையைக் கோரியுள்ளது சர்வதேச பொது மன்னிப்புச் சபை

இலங்கை தொடர்பில் ஐ.நா வின் விசாரணையைக் கோரியுள்ளது சர்வதேச பொது மன்னிப்புச் சபை

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 10:46 pm

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது .

யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அனைத்துப் பக்கங்களில்  இருந்தும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் என கோருவதாக சர்வதேச பொது மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இரண்டு தரப்புக்கள் மீதுமான பக்கச்சார்பற்ற, நம்பகமான மற்றும் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறும் அந்த சபை அழைப்பு விடுத்துள்ளது​.

அத்தோடு, இலங்கையில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், தடுப்புக்காவல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் கொலைகள் போன்றவற்றிற்கு பொறுப்புக்கூறி,  இலங்கை அரசாங்கம் அவற்றை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்