இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 6:09 pm

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 மாலுமிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள்கள் வான் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் மேலும் இரு மாலுமிகளைக் காணவில்லை.

மும்பை கடற்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், டீசல் மூலம் இயங்கும் குறித்த  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெளியான புகையால் மாலுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலின் மூடிகள் தானாகவே மூடிக்கொண்ட போது, இந்தப் புகை திடீரெனக் கிளம்பியுள்ளது.

மும்பையில் இராணுவக் கப்பல் கட்டுமிடத்தில் இன்னுமொரு ரஷ்ய தயாரிப்பான நீர்மூழ்கியொன்று கடந்த வருடம் வெடித்து மூழ்கியதில் 18 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்