இத்தாலிய பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

இத்தாலிய பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

இத்தாலிய பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 2:28 pm

இத்தாலியின் புதிய பிரதமர் மெட்டியோ ரென்சி அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்கு முன்னர் கடுமையான மறுசீரமைப்புத் திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் பின்தங்கியுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேர்தல் சட்டமறுசீரமைப்பு, வரிக் குறைப்பு, தொழில்வாய்ப்பு முதலீடுகள் போன்ற திட்டங்களை ரென்ஸி முன்மொழிந்துள்ளார்.

அத்துடன் சட்டங்களை உருவாக்கும் அமைப்பாக பாராளுமன்ற மேல் சபை இருப்பதை இல்லாது செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்திலட நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ரென்சிக்கு ஆதரவாக 378  பேரும் எதிராக 220 பேரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்