ஆத்மா குடியிருப்பதாக நம்பி கற்குவியல் வழிபாடு

ஆத்மா குடியிருப்பதாக நம்பி கற்குவியல் வழிபாடு

ஆத்மா குடியிருப்பதாக நம்பி கற்குவியல் வழிபாடு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 9:25 am

தமிழகத்தின் மேட்டூர் அருகே ஆத்மா குடியிருப்பதாகக் கூறி அரசுக்கு சொந்தமான இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்குவியல் நேற்று அகற்றப்பட்டுள்ளது.

மேட்டூரைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், இறந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் என்று உருண்டை கற்களை, அரசுக்கு சொந்தமான சொந்தமான இடத்தில் குவித்து பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் சமூகத்தில் ஒவ்வொருவரும் இறக்கும் போது, அவர்களின் ஆத்மா உருண்டை கற்களில் குடியேறுவதாக நம்பி, அந்த கற்களை கொண்டு பூஜையும் செய்துள்ளனர்.

இது தொடர்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மோகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

நீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கற்களை அகற்றி எடுத்துச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட சமூகத்தினரிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் ஆத்மா குடியேறியுள்ள கற்களை தாங்கள் அகற்றமாட்டோம், எனக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் கற்குவியலை அகற்றியதோடு, பாதுகாப்பிற்காக 300 பொலிஸாரை ஈடுபடுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்