அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு; இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும் ஸ்தம்பிதம்

அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு; இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும் ஸ்தம்பிதம்

அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு; இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 11:54 am

அரச இருதய சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்கள் சங்கம் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.ரி.தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பணி பகிஷ்கரிப்பினால் இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திர சிகிச்சையும், மாற்று அறுவை சிகிச்சையும் இடம்பெறவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சத்திர சிசிக்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியில் உள்ள நோயாளர்களுக்கு வேறு திகதிகளை ஒதுக்கிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்