அனைவருக்கும் இலவச Wi-Fi சேவை; அமெரிக்க நிறுவனத்தின் புதிய திட்டம்

அனைவருக்கும் இலவச Wi-Fi சேவை; அமெரிக்க நிறுவனத்தின் புதிய திட்டம்

அனைவருக்கும் இலவச Wi-Fi சேவை; அமெரிக்க நிறுவனத்தின் புதிய திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 4:27 pm

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு செயற்கைக் கோள் மூலமான இணையத் தரவு சேவைகளை (Free Wi-Fi)   வழங்க அமெரிக்க நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும், இலாப நோக்கற்ற நிறுவனமான MDIF வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், எவ்விதத் தடைகளும் இன்றி உலகிலுள்ள அனைத்து மக்களுக்குமான இலவச இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி அதன் மூலமாக தொலைபேசி மற்றும் கணணி பாவணையாளர்களுக்கான இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் திட்டத்திற்கு அவுட்டர்நெட் (Outernet) எனப் பெயரிட்டுள்ளனர்.

உலகின் மக்கட்தொகையில் 40 வீதமானவர்கள் இணைய வலையமைப்பில் இணைத்துக்கொள்ளப்படாத நிலையில் தற்போதும் இருப்பதாக MDIF நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சில நாடுகளில் இணையப் பாவனை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதுடன், சில தொலைதூரக் கிராமப் புறங்களுக்கு இணையப் பாவனையை வழங்குவதானால் அதிகம் செலவு செய்ய நேர்வதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்த இலவசWi-Fi சேவையை வழங்க குறித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்