வவுனியாவில் போலி ஸ்டர்லிங் பவுன்களுடன் இருவர் கைது

வவுனியாவில் போலி ஸ்டர்லிங் பவுன்களுடன் இருவர் கைது

வவுனியாவில் போலி ஸ்டர்லிங் பவுன்களுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 4:48 pm

வவுனியாவில் போலி ஸ்டர்லிங் பவுன் தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வவுனியா பஸ் தரிப்பிடத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து போலி ஐம்பது ஸ்டர்லிங் பவுன் தாள்கள் 06 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்