ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலை தொடர்பில் ஜெயலலிதா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலை தொடர்பில் ஜெயலலிதா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலை தொடர்பில் ஜெயலலிதா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 6:18 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீள்பரிசிலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான வீ.நாராணசாமி வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகள் சிறந்த தலைவரும் நாட்டின் பிரதமருமான ராஜிவ் காந்தியை கொலை செய்துள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களாயின் அது மிகவும் மோசமான முன் உதாரணமாக அமையும் என வி.நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழக அரசாங்கத்தின் இந்த தீர்மானம் அதிர்ச்சியான ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென தெரிவித்துள்ள அவர்,  குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்மானம் கட்டாயமாக மறுபரீசிலனை செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டதன்  பின்னர் ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் கடுமையான போக்கினை பின்பற்றியதாக மத்திய இணை அமைச்சர் வீ.நாராணயசாமி கூறியுள்ளார்

எனினும் தற்போது கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தன்னிச்சையான தீர்மானத்தை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமைக்கு எதிராக தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்பாட்டம்  நடத்தியுள்ளது.

சுலோங்களை ஏந்திய ஆர்பாட்டகாரர்கள் கூச்சலிட்டதுடன், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உருவப் பொம்மைகளையும் எரியூட்டியுள்ளனர்.

மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த மனுவை அடுத்து ராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்