யாழ் தேவி பளை வரை பயணம்  (Photos)

யாழ் தேவி பளை வரை பயணம் (Photos)

யாழ் தேவி பளை வரை பயணம் (Photos)

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 3:39 pm

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ரயில் சேவையை விஸ்தரிக்கும் திட்டத்தின்கீழ் இன்று பளை வரையான பரீட்சார்த்த ரயில் சேவை நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10.20ற்கு கிளிநொச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி ரயில் 10.43ற்கு பளை ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர், உள்ளிட்ட பலர் இந்த பரீட்சார்த்த பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கிளிநொச்சி, பரந்தன்,  ஆனையிறவு, பளை ஆகிய ரயில் நிலையங்களையும் இவர்கள் பார்வையிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் யாழ் தேவி பளை வரை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

train 3 train 2


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்