மே 2 வெளியாகும் விஸ்வரூபம் – 2

மே 2 வெளியாகும் விஸ்வரூபம் – 2

மே 2 வெளியாகும் விஸ்வரூபம் – 2

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 5:12 pm

விஸ்வரூபம் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை அடுத்து தற்போது அடுத்த பிரம்மாண்டத்திற்கு விஸ்வரூபம்-2 படம் தயாராகி வெளியாக உள்ளது.

இந்த படம் முதலில் 2013இல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.  பின்னர்  2014 ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

எனினும் இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதால், தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் வெளியீட்டை அறிவிக்க தயாராகியுள்ளனர்.

முதலில் விஸ்வரூபம் படம் ஏப்ரல் 11 திகதி வெளியிட திட்டமிட்ட நிலையில் கோச்சடையான் வெளியீடு காரணமாக மே 2ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட விரும்பமாட்டார்கள். இதனால் தான் விஸ்வரூபம் பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்