மன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்றும் மண்டையோடுகள் மீட்பு

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்றும் மண்டையோடுகள் மீட்பு

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்றும் மண்டையோடுகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 6:58 pm

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.

புதைகுழியில் 30ஆவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் –  மாந்தை  வீதியில் கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் திகதி நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கையின் போது இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்