மனைவியை பொல்லால் தாக்கிய கணவர் கைது; திருமலையில் சம்பவம்

மனைவியை பொல்லால் தாக்கிய கணவர் கைது; திருமலையில் சம்பவம்

மனைவியை பொல்லால் தாக்கிய கணவர் கைது; திருமலையில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 11:10 am

திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் மனைவியை பொல்லால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்லாள் தாக்கப்பட்ட பெண் திருகோணமலை  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

சந்தேகநபரான கணவன் நேற்று மாலை மது போதையில் வீட்டிற்கு வந்த போது , மனைவியை தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்