பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான சார்லட் டோவ்ஸன் சடலமாக மீட்பு

பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான சார்லட் டோவ்ஸன் சடலமாக மீட்பு

பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான சார்லட் டோவ்ஸன் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 1:06 pm

அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான சார்லட் டோவ்ஸன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

47வயதான சார்லட் , அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதுடன் , மீட்கப்பட்ட இடத்திலிருந்து எவ்வித தடய்ங்களும் கிடைக்கப்பெறவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரியல்லிட்டி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் , இவர் திகழ்ந்ததுடன் , மொடல் அழகிக்கான தேர்வு நிகழ்வுகளில் சார்லட் நடுவராகவும் இருந்துள்ளார்.

நியூஸிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட சார்லட் , கடந்த காலங்களில் மன அழுத்தங்களில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது,.

இவரது மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் , மரணத் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்