பாடசாலை சிறுமிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல்

பாடசாலை சிறுமிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல்

பாடசாலை சிறுமிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 9:26 am

அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய பகுதியில் 8 பாடசாலை சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் விளக்கமறியலில் வைக்க்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்கப்ட்டுள்ளார்.

15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த ஆசிரியரால் மேலும் 7 பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் தெல்தெனிய பகுதியில் கைது செய்யபப்ட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரிய ஆலோசகரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து , நாளை வரை அவர் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்