நீரைக் கொண்டு செல்லும் சுரங்கப் பாதை நாற்பது வருடங்களின் பின் புனரமைக்கப்படுகிறது (விசேட தொகுப்பு)

நீரைக் கொண்டு செல்லும் சுரங்கப் பாதை நாற்பது வருடங்களின் பின் புனரமைக்கப்படுகிறது (விசேட தொகுப்பு)

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 9:34 pm

லக்ஷ்பான நீர்த்தேகத்தில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரைக் கொண்டு செல்லும் சுரங்கப்பாதை தற்போது புனரமைக்கப்படுகின்றது.

40 வருடங்களின் பின்னர் மேற்கொள்ளப்படும் இந்த திருத்தப் பணிகளை பார்வையிட அண்மையில் நியுஸ் பெஸ்ட் குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.

ஐந்து கிலோமீற்றர் உள்ளே பயணிக்க வேண்டியிருந்த போதிலும் ஆபத்திற்கு மத்தியில் எமது குழுவினர் சுரங்கப் பாதையில் பயணத்தை ஆரம்பித்தனர்.

இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையில் பயணிக்கும் போது அங்கு கொங்ரீட்டால் நிர்மாணிக்கப்பட்ட குழியொன்றை காணமுடிந்தது.

கெனியொன் நீர்த்தேகத்தின் சுரங்கப்பாதையூடாக லக்ஷ்பான மின் உற்பத்தி நிலையம் வரை நீரை கொண்டு செல்கையில், நீரில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்றுவதற்காக இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது.

ரொக் ரெப்ட் எனும் இவ்வாறான மூன்று இடங்கள் இந்த சுரங்கப்பாதையினுள் காணப்படுகின்றன.

சுரங்கத்தினுள் தொடர்ந்து பயணிக்கையில் மற்றுமொரு வியத்தகு விடயத்தை அவதானிக்க முடிந்தது.

சுமார் 20 மீற்றர் உயரத்தில் நிர்மாணிக்க்பட்டுள்ள கிணறு போன்ற அமைப்பை ஒத்த இந்த பகுதி நீரின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு முன்னர்  பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக எமது குழுவினர் முன்னோக்கி பயணித்தனர்.

லக்ஷ்பான நீர்த்தேகத்தின் நிர்மாணம் மற்றும் புனர்நிர்மாணம் என்பவற்றில் உள்நாட்டு பொறியிலாளர்களின் பங்களிப்பு அதிகளவில் காணப்பட்டது.

சுரங்கப்பாதையின் சுத்தீகரிப்பு நடவடிக்கைகள் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகியதுடன் அதனை மார்ச் 31 ஆம் திகதி நிறைவு செய்ய இவர்கள் ஏதிர்பார்த்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்