தமிழக மறைமாவட்ட ஆயருக்கு, யாழ் மறை மாவட்ட ஆயர் அழைப்பு

தமிழக மறைமாவட்ட ஆயருக்கு, யாழ் மறை மாவட்ட ஆயர் அழைப்பு

தமிழக மறைமாவட்ட ஆயருக்கு, யாழ் மறை மாவட்ட ஆயர் அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 9:09 pm

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த தவக்கால யாத்திரைக்கு தமிழக மறைமாவட்ட ஆயருக்கு, யாழ் மறை மாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.

வருடாந்த தவக்கால திருவிழாவிற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை, யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தமிழ்நாடு சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கு நேற்று முன்தினம்  விடுக்கப்பட்டுள்ளதாக யாழ் ஆயர் இல்லத்தின் செயலாளர் தெரிவித்தார்.

யாழ். மறை மாவட்டத்தின் அழைப்புக்கான பதில் எதுவும் இதுவரையில், சிவகங்கை மறை மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த தவக்கால திருவிழா அடுத்த மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வருடாந்த திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் அனேகமான பக்தர்கள் கலந்து சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்