சிறந்த கல்வியின் மூலம் நாட்டை நேசிக்கும் சந்ததியை உருவாக்க முடியும் – ஜனாதிபதி

சிறந்த கல்வியின் மூலம் நாட்டை நேசிக்கும் சந்ததியை உருவாக்க முடியும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 7:01 pm

இன, மத பேதமின்றி கல்வியின் பெறுமதியை அனைத்து பெற்றோரும் உணர்ந்து செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

உரிய முறையில் கல்வியை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக குறுகிய நோக்கமற்ற சமூகம் குறித்து புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய, நாட்டை நேசிக்கும் எதிர்கால சந்ததியொன்றை உருவாக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை இன்று முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்