குற்றவாளிகளை 3 நிமிடங்களில் கண்டறிய கைவிரல் அடையாளம்

குற்றவாளிகளை 3 நிமிடங்களில் கண்டறிய கைவிரல் அடையாளம்

குற்றவாளிகளை 3 நிமிடங்களில் கண்டறிய கைவிரல் அடையாளம்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 6:32 pm

குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கைவிரல் அடையாளத்தை பரிசோதிக்கும் தன்னியக்க முறைமையொன்றை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அடுத்த வாரமளவில் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திடமிருந்த 3,70,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே புதிய தன்னியக்க கணணிக் கட்டமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் எவருக்கேனும் பொலிஸ் அறிக்கை விநியோகிக்கும்போது அவர் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பதை மூன்று நிமிடங்களில் அறிந்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் இந்த புதிய கணணின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்