குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு விசேட செயற்திட்டம்

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு விசேட செயற்திட்டம்

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு விசேட செயற்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 10:37 am

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுதறை மாவட்டத்திற்கு குடிநீர் விநுயோகிப்பதற்காக 10 பவுசர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார்.

இதை தவிர கண்டி மாவட்டத்தில் நிலவும் நீர்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு 06 குடிநீர் பவுசர்களும் , ஊவா மாகாணத்திற்கு 08 நீர் பவுசர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்திற்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்க்பட்டுள்ளன.

வறட்சி காரணமாக நீரை பயன்படுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சபையின் பொதுமுகாமையாளர் ரன்ஜித் பாலசூரிய பொது மக்களுடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்