எழுத்தாளர் ஜெயகாந்தன் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் ஜெயகாந்தன் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் ஜெயகாந்தன் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 5:33 pm

எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கிய உலகில் ‘ஜே.கே’ என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். வைத்தியசாலையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1950 களில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர்.

அரசியல், இலக்கியம், சினிமா என பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ முதலான பல படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர்.

தனது தைரியமான எழுத்துகளால் சமூகத்தைப் பிரதிபலித்த எழுத்தாளராகப் போற்றப்பட்ட இவர், இளம் எழுத்தாளர் பலருக்கும் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்