இருவேறு விபத்துக்களில்; நான்கு பேர் பலி

இருவேறு விபத்துக்களில்; நான்கு பேர் பலி

இருவேறு விபத்துக்களில்; நான்கு பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 2:05 pm

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்கிசை டெம்பலஸ் வீதியிலுள்ள விஞ்ஞான கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும்   நேருக்கு நேர் மோதி, நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்

தலவாக்கலை மடக்கும்புற பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே விபத்தில் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தனமல்வில, தம்புளை, அலவ்வ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்