இத்தாலிய கடற்படையினர் வழக்கில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை – ஏ.கே அந்தோனி

இத்தாலிய கடற்படையினர் வழக்கில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை – ஏ.கே அந்தோனி

இத்தாலிய கடற்படையினர் வழக்கில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை – ஏ.கே அந்தோனி

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 7:30 pm

இத்தாலி கடற்படையினர் தொடர்பான வழக்கில் எந்தவொரு விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை என இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோனி தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு இந்திய கடற்பரப்பில் கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றதாக இரண்டு இத்தாலிய கடற்படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இந்திய சட்டத்தின் பிரகாரமே அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோனி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தாம் எந்தவொரு வகையிலும் பின்நோக்கி செல்லப் போவதில்லை எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி கடற்படையினர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மென்மைப்போக்கு கடைப்பிடிக்கப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சட்டம் பொருந்தாது என இந்திய வெளிவிவகார அமைச்சும், சட்ட அமைச்சும் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமது கடற்படையினர் மீது கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறித்து இத்தாலி கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது.

இந்த வழக்கு இரு தரப்பு உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்