அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 7:24 pm

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதிபெற்றுள்ளது.

டுபாயில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

209 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை எட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்