14 வருடங்களின் பின்னர் 3 முக்கிய வீரர்களின்றி களமிறங்கவுள்ளது இலங்கை

14 வருடங்களின் பின்னர் 3 முக்கிய வீரர்களின்றி களமிறங்கவுள்ளது இலங்கை

14 வருடங்களின் பின்னர் 3 முக்கிய வீரர்களின்றி களமிறங்கவுள்ளது இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

21 Feb, 2014 | 5:07 pm

மிர்பூரில் இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் 61 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, நாளைய போட்டியில் மூன்று முக்கிய வீரர்கள் இன்றி விளையாட உள்ளனர்.

14 வருடங்களுக்குப் பின்னர், இலங்கை அணியின் முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார, திலகரத்ன டில்ஷான், மஹேல ஜயவர்தன ஆகியோரின் பங்களிப்பு இன்றி நாளைய மூன்றாவது போட்டியில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டின் பின்னர், குறித்த மூவரில் ஒருவரேனும் இல்லாமல் இலங்கை அணி போட்டியை எதிர்கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்வானது பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடும் என நம்பப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்