முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு இரத்து

முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு இரத்து

முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு இரத்து

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 11:11 am

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு சட்டபூரவமற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான நீதிபதி ஶ்ரீ ஸ்கந்தராஜா வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இன்று செல்லுபடியற்றதாக்கியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்திரா ஏக்கநாயக்க, சத்தியா ஹெட்டிகே, ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேன்முறையீடு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து சட்ட மாஅதிபர் பாலித பெர்னான்டோ இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறான வழிகாட்டல் எனவும், பாராளுமன்றத்திற்கு நீதிமன்றத்தினால் உத்தரவிட முடியாது எனவும் சட்ட மாஅதிபர் தனது மேன்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்

பாராளுமன்ற தெரிவுக் குழுவை ஆட்சேபித்து பொதுமக்கள் சார்பாக தாக்கல் செய்திருந்த சில மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்