மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது

மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது

மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 9:31 am

மஹரகம பகுதியில் 4 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை சேவையிலீடுபடும் வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

9 வயதான இந்த மாணவிகளை வேனில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போதே சாரதியினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்களுக்கு அறிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட சாரதி மஹரகம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 4 மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்