மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 9:19 am

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

28 ஆம் நாளாக இந்த புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட உள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலம் மொத்தம் 74 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து நேற்றும் ஐந்து மண்டையோடுகள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதுதவிர மனித புதைகுழியில் ஏற்கனவே அளவிடப்பட்டிருந்த 9 எலும்புக்கூடுகள் முழுமையாக நேற்று அகழ்ந்தெடுக்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில், அனுராபுரம் விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.எல். வைத்தியரட்ன தலைமையிலான குழுவினரால் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தை வீதியூடாக நீர் குழாய்களை பொருத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால் கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் திகதி இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்