பேஸ்புக் விவகாரத்தால் மாணவி தற்கொலை; வித்தியாலய அதிபர் இடமாற்றம்

பேஸ்புக் விவகாரத்தால் மாணவி தற்கொலை; வித்தியாலய அதிபர் இடமாற்றம்

பேஸ்புக் விவகாரத்தால் மாணவி தற்கொலை; வித்தியாலய அதிபர் இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 10:01 am

குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலய அதிபரை வலயக் கல்வி அலுவலகமொன்றிற்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாகாணத்திலுள்ள அதிபர்களோ ஆசிரியர்களோ  மாணவர்கள் மீத தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வார்களாயின், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்து :-

“பாடசாலைக்குள் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, அதிபரினால் ஏதேனும் தடை ஏற்படும் பட்சத்தில், அது பாரிய பிரச்சினையாக மாற்றமடையக் கூடும் என்பதால், குறித்த அதிபரை வலய அலுவலகமொன்றிற்கு மாற்றுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.ஏனெனில் இந்த பாடசாலையில் 5,000ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்