பூண்டுலோயா நகரில் பரவிய தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதி சந்திப்பு

பூண்டுலோயா நகரில் பரவிய தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதி சந்திப்பு

பூண்டுலோயா நகரில் பரவிய தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதி சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 7:07 pm

நுவரெலியா பூண்டுலோயா நகரில் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் சந்தித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

பூண்டுலோயா நகரில் இன்று அதிகாலை 2.15 அளவில் பரவிய தீயினால் 32 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதில் 7 சிறுவர்களும் அடங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நுவரெலியா மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்