தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 3:38 pm

மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 234 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக  தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், மாவட்டத்தில் 65 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைபாட்டுப் பணியகம்  குறிப்பிடுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் 21 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்டத்தில் 36 முறைபாடுகளும் கிடைத்துள்ளன.

காலி மாவட்டத்தில் 23 முறைப்பாடுகளும், மாத்தறை மாவட்டத்தில் 26 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது.

சட்டவிரோத கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாக அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 52 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் பிரசார பதாகைகள் மற்றும் சுரொட்டிகள் தொடர்பில் 46 முறைபாடுகளும், இடமாற்றம் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் 39 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்