காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு

காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு

காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 10:25 am

காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் காலஎல்லை ஜனாதிபதியினால் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்பாணையை இந்த வருடம் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை ஜனாதிபதி நீடித்துள்ளதாக, ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை சுமார் 16,000 முறைபாடுகள் கிடைத்துள்ளன.

இதற்கமைய காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளின் முதற்சுற்று சாட்சி விசாரணைகள் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்திலும், பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்திலும் இடம்பெற்றன.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காணாமற் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு இந்த ஆணைக்குழு அறிக்கையை தயாரித்துள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்