ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது: இந்திய அரசு

ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது: இந்திய அரசு

ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது: இந்திய அரசு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 2:30 pm

இந்திய மக்களவைத் தேர்தல் காரணமாக, ஐபிஎல் போட்டிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

இதனால், ஐ.பி.எல் காலப்பகுதியில் 7 போட்டிகள், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ஐபிஎல் போட்டிகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது கடினம்என்றார்.

ஐபிஎல் சீசன் 7 போட்டிகள் ஏப்ரலில் நடைபெறுகிறன. அதே நேரத்தில், ஏப்ரல் மே மாதங்களில் பல்வேறு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கமான பிசிசிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துவிட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய பாதுகாப்புப் பணிகளில் 1.20 லட்சம் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நக்சலைட் அபாயமுள்ள மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு வழங்க முடியாது என பிசிசிஐக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதனால், ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்