உக்ரேயின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பு

உக்ரேயின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பு

உக்ரேயின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 12:28 pm

யுக்ரையின் தலைநகர் க்வ்வில் மோதல்கள் தீவிரடைந்துவரும் நிலையில். அந்த நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

வன்முறைகள் மற்றும் அளவுக்கு அதிகமான படையினர் பயன்படுத்தப்பட்டமைக்கு பொறுப்பானவர்கள்  என கூறப்படும் யுக்ரையின் அதிகாரிகளுக்கு எதிராக தடைவிதிக்க ஒன்றியத்தின் வெளிவிகார அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிரஸல்ஸ்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் அவசர சந்திப்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், விசா தடையும் அமுல்படுத்தப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் க்வ்வில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 21 அரச எதிர்ப்பு ஆர்பாட்டகாரர்கள்  கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளதாக  யுக்ரைய்ன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

67 பொலிஸ் நிலையங்களை ஆர்பாட்டகாரர்கள் கைப்பற்றியுள்ளதாக  யுக்ரைய்ன் உள்விவகார அமைச்சு கூறியுள்ளது,

ஏற்கனவே  பெயர் குறிப்பிடப்படாத யுக்ரைய்ன் அதிகாரிகள் 20 பேருக்கு  அமெரிக்கா விசா தடையை அமுல்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த சனிக்கிழமை முதல் யுக்ரையினில் இடம்பெறும் வன்முறைகளில் இதுவரை 75 பேர் கொல்லப்பட்டதுடன், 571 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்