அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா பிரேரணை

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 6:30 pm

இலங்கை போதைப் பொருள் வர்த்தகத்தின் மையமாக மாற்றப்படுவதாக தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, இந்தியாவின் கூடங்குளம் அணு உற்பத்தி நிலையத்தில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தயாராகவுள்ளதாக தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கதிரியக்க நிலை தொடர்பில் நாடளாவிய ரீதியில் முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டக்கல்லூரிக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதம நீதியரசரிடம் விடயங்களை கேட்டறிந்து மீண்டும் பாராளுமன்றம் கூடும் தினத்தில் அந்தக் கேள்விக்கான பதிலை வழங்குவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்