யாழ். மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ். மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 4:15 pm

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டடொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழ். ஒருங்கிணைந்த தேசிய மீனவ செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 10.20 அளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

jaffna 01

சுமார் 1 மணித்தியாலமாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

தமது வீடுகள் இடிக்கப்படக்கூடாது, காணிகளை அபகரிக்கக்கூடாது எனவும், அந்நிய மீனவர்கள் வெளியேற்றப்படுவதுடன், தமக்கான மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குகிற்பிடுகின்றார்.

jaffna 03

தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவபடுத்தி வட மாகாண சபையின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்