யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 9:49 am

காணாமற் போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்றைய சாட்சி விசாரணைகள் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் வலி கிழக்கு, கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றன.

இதன்போது கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 49 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், காணாமல் போனோர் தொடர்பில் மேலும் 93 முறைபாடுகளும் பதிவுசெய்யப்பட்டடிருந்தன.

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் முறைபாடு செய்துள்ள சுமார் 200 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியளிப்பதற்கு சமூகமளிக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்தில் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்