மீனவர் பிரச்சினை; தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு கடிதம்

மீனவர் பிரச்சினை; தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 6:55 pm

இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 121 மீனவர்களையும் அவர்களது 26 படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் ஜெயலலிதா ஜெயராம் வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரச்சினைகள்  தொடர்பில் பிரதமர் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் எனவும் அந்த கடித்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எழுதிய கடிதங்களில் இலங்கை கடற்படையினரால், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய  மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை தான் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம்,  இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்