தொடரும் ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு

தொடரும் ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 8:09 pm

பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், சுமார் 100 ரயில்கள் இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

எனினும், இன்று 170 ரயில் சேவைகள் முன்னெடுக்க திட்டமிட்டிருந்ததாக கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, தாம் ஆரம்பித்த பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக “லொகோ மோடிவ்’’ இயக்குநர் பொறியியலாளர் சாரதிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சங்கத்துடன் தொடர்புடைய சில ரயில் சாரதிகள் இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“லொகோ மோடிவ்’’ இயக்குநர் பொறியியலாளர் சாரதிகள் சங்கத்தின் தலைவர் ஐ.எல்.கே.திசாநாயக்க, போக்குவரத்து அமைச்சின் கண்காணிப்பு அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மாலை இந்த பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்