தீயில் சிக்கி யுவதி மரணம்; அக்கரைப்பற்றில் சம்பவம்

தீயில் சிக்கி யுவதி மரணம்; அக்கரைப்பற்றில் சம்பவம்

தீயில் சிக்கி யுவதி மரணம்; அக்கரைப்பற்றில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 1:31 pm

அக்கரைப்பற்று வாச்சிக் குடா பகுதி வீடொன்றில் தீயினால் உடல் கருகிய நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யுவதியின் சடலம் இன்று காலை 9.30 அளவில் வீட்டினுள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

22 வயதான யுவதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வீடு தீப்பற்றியமைகான காரணம் இதுவரையில் கண்டறியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அக்கறைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்