திருமணத்திற்கு மறுத்ததால், பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபன்…

திருமணத்திற்கு மறுத்ததால், பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபன்…

திருமணத்திற்கு மறுத்ததால், பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபன்…

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 12:48 pm

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் தலைநகர் லாகூருக்கு அருகிலுள்ள  கிராமத்தில் வசிக்கும் இளைஞரொருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு யுவதி தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளார் .

இதனையடுத்து பெண்ணின் வீட்டிற்கு சென்ற இளைஞன் , தாய் மற்றும் தந்தையை சித்திரவதைக்குட்படுத்திய  வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ள கூடாது என  இளைஞன் , பெண்ணின் மூக்கை அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை தொடர்ந்து , அந்த இளைஞர் மீது பொலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போதிலும். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்