டெல்லி முதலமைச்சர் இராஜினாமா

டெல்லி முதலமைச்சர் இராஜினாமா

டெல்லி முதலமைச்சர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 9:10 am

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற 49வது நாளில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன்  அவருடன், அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி இருந்து விலகியுள்ளனர்.

ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் அவர் இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதவை நிறைவேற்றுவதே ஆம் ஆத்மியின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதி என குறிப்பிட்ட அரவிந்த்,  மசோதாவை நிறைவேற்ற முடியாமல் பாரதீய ஜனதாக்கட்சியும் ,  காங்கிரஸும் கூட்டாக தடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்ட சபையில்  ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள அரவிந்த்,  முகேஷ் அம்பானிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன் காரணமாகவே, இந்த மசோதாவை அறிமுகப்படுத்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் அனுமதிக்கவில்லை எனவும்  குற்றம்சாட்டியுள்ளார் .

ஊழலை ஒழிப்பதற்காக தனது முதல்வர் பதவியையும், தன் உயிரையும் தியாகம் செய்வதை அதிர்ஷ்டமாகக் கருதுவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்