ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா?

ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா?

ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா?

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 11:28 am

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் 7ஆவது ஐ.பி.எல் போட்டி இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல் போட்டி நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை 7ஆவது ஐ.பி.எல் போட்டி நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் போட்டி இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்பது குறித்து அடுத்த வாரம்தான் தெரியவரும். ஐ.பி.எல் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அடுத்த வாரம் மத்திய உள்துறை அமைசின் அதிகாரிகளை சந்தித்துப் கலந்துரையாடவுள்ளனர். அதன் பின்னர் தான் எங்கு எப்போது போட்டிகள் நடைபெறும் என்பது உறுதி செய்யப்படும்” என ஐ.பி.எல் போட்டி நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்