யாழுக்கு நீர் விநியோகம் தொடர்பில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் -ஜங்கரநேசன்

யாழுக்கு நீர் விநியோகம் தொடர்பில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் -ஜங்கரநேசன்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 7:35 pm

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகிப்பது தொடர்பிலான இறுதி முடிவை மிக விரைவில் எடுக்கவுள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னத்துரை ஜங்கரநேசன் தெரிவிக்கின்றார்.

இந்தத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை இன்று தமக்கு கிடைக்கக் கூடும் என நியூஸ் பெஸ்டுக்கு அவர் தெரிவித்தார்.

2007  ஆம் ஆண்டு கைச்சாதிடப்பட்ட இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகிப்பதற்கான திட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பில் ஆராயும் 15 பேரைக் கொண்ட குழு தமது உத்தியோகபூர்வ அறிக்கையை இன்றைய தினம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் குறிப்பிட்ட அறிக்கை வட மகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளததாகவும் அவரே இறுதி தீர்மானத்தை எடுப்பார் எனவும் வட மாகாண விவசாய அமைச்சர் தெரிவிக்கின்றார்

தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு மத்தியில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாகவும் வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னத்துரை ஜங்கரநேசன் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்